வணக்கம்.
இந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் அட்டை கட்டாயம். இதுவரை ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் என்றால்தான், என்ற நெறிமுறையிலிருந்து தனிநபர் முதலீட்டாளர்கள் அனைவருக்கும்/முதலீடு எவ்வளவாயிருந்தாலும் பான் அட்டை இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
பான் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்ப நிலை அறிய:
இணைய முகவரி
இணையவழி விண்ணப்பித்தாலும், டி.டி, புகைப்படம், முகவரி அத்தாட்சிகள் போன்றவை தபாலில்தான் அனுப்பவேண்டும். அதுபோக இணையவழி விண்ணப்பத்திலும் வரைவோலை எண் குறிப்பிடவேண்டியிருக்கும்.
அதனால் எல்லாவற்றையும் இணையவழி உள்ளிட்டு, பிரதியெடுத்து அத்தாட்சிகளுடன் அனுப்பவோ
அல்லது
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பத்தை இறக்கி நீங்களே எல்லாவற்றையும் கையில் எழுதி அனுப்பவோ செய்யலாம்.
http://www.tin-nsdl.com/downloads/Form-49A_260907.pdf
ஆனால் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு விண்ணப்ப அத்தாட்சி எண் (Acknowledgment No. to Track)
கிடைக்காது.
இந்தியாவில் உள்ளவர்கள் ரூ. 67, வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் முகவரிக்கு அனுப்ப ரூ. 717க்கும் டி.டி. எடுக்க வேண்டியிருக்கும்.
இது தவிர வங்கிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.
பான் அட்டை உங்கள் கையில் கிடைக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். ஆனால் அதுவரை பாரம் 60 (Form 60) மூலம் முதலீடு செய்யலாம். பின்னர் அட்டை வந்த பிறகு பிரதி அனுப்பினால் போதுமானது.
மேலும் ரூ. 50,000க்கு அதிகமான முதலீட்டுக்கு இந்த ஜனவரியில் இருந்து KYC (Know Your Customer) எனப்படும் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்' படிவத்துக்குண்டான தகவல்கள்/அத்தாட்சிகளும் அளிக்கவேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
More info. on PAN Card
FAQ on PAN
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment