மியூச்சுவல் ஃபண்ட் பற்றி வலைப்பதிவுகளில், நாணயம் விகடன் போன்ற இதழ்களில் பல தொடர் கட்டுரைகள் வந்திருந்தாலும் ஒரே புத்தகமாக தமிழில் "கிழக்கு பதிப்பகம்" கொண்டு வந்திருக்கிறது, தகவல் அவர்களுடைய இணைய தளத்திலிருந்து:
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது லாபகரமானதுதான். கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்க முடியும்தான். ஆனால் பலத்த ரிஸ்க் உள்ள ஏரியா அது! ஆழம் தெரியாமல் காலை விட்டால் அதோகதியாகும் அபாயம் எக்கச்சக்கம்.
எனக்கு ரிஸ்கெல்லாம் வேண்டாம்ப்பா என்கிறீர்களா? பாதுகாப்பாக, கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைப் பெருக்கினால் போதும் என்று தோன்றுகிறதா? வங்கி ஃபிக்சட் டெபாசிட்தான் சுலப வழி. ஆனால் போரடித்துவிடும்.
இந்த இரண்டு தவிர, மூன்றாவதும் ஒன்று உண்டு. அதுதான் மியூச்சுவல் ஃபண்ட். கையைச் சுட்டுக் கொள்ளாமல் அதேசமயம் கணிசமாகச் சம்பாதிக்க நினைப்பவர்களின் தாரக மந்திரம் இன்று இதுதான்!
உங்கள் வயது, உங்கள் முதலீடு, நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க், எதிர்பார்க்கிற லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கண கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வசதிகள் உள்ள ஒரே துறை மியூச்சுவல் ஃபண்ட்தான்.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? எப்படி அது லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறது? எது நல்ல மியூச்சுவல் ஃபண்ட்? மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நஷ்டம் வரவே வராதா? இதுவும் பங்குச் சந்தைதானாமே?
ஆயிரம் கேள்விகள். அதைவிட அதிகக் குழப்பங்கள். கவலையை விடுங்கள். லட்டு மாதிரி எளிமையாக விளக்குகிறது இந்த நூல்.
புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடத் தயாராகிறீர்கள் என்றால், முதலில் ஒரு மணிநேரம் உட்கார்ந்து இதைப் படித்துவிடுங்கள். அதன்பின் எந்தக் குழப்பமும் இல்லாமல் எளிதாகப் புகுந்து விளையாடலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)
Pages: 151
ISBN: 978-81-8368-528-3
Category: Business
Thursday, January 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்த புத்தகத்தைப் பற்றிய விமரிசனம்
இங்கே
Post a Comment