Tuesday, January 22, 2008

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

கடந்த சிலதினங்களாக நிலவும் பங்குச்சந்தை கறுப்புதினங்கள் ஏற்கனவே முதலிட்டவர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தாலும், புதிதாக உள்ளே நுழைய நினைப்பவர்களுக்கும், மேலும் வாங்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல தருணமாகவே படுகிறது. பரஸ்பரநிதி முதலீட்டைப் பொருத்தவரை நீண்டகால தொடர்முதலீடுதான் (long term, Systematic Investment Plan(SIP)) சிறப்பானது என்றாலும், காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளவேண்டும்தானே!

மிகச்சிறந்த பரஸ்பரநிதி திட்டங்கள் என்று ValueResearchOnline மற்றும் CRISIL மூலம் வகைப்படுத்தபட்டவைகள் கூட யூனிட் மதிப்பை 20%க்கு மேல் இழந்திருக்கிறது. அதனால், ஒரு வருடத்துக்கும் மேல் உங்கள் முதலீடு காத்திருக்க முடியும் என்றால், இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல பலன் கொடுக்கலாம். கீழே உள்ள அட்டவணையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் கடந்த 52 வார காலத்தில் அடைந்த உச்சபட்ச மதிப்பு (பெரும்பாலும் கடந்த இருவாரங்களுக்கு முன்) மற்றும் இப்போதைய மதிப்பும் கொடுத்துள்ளேன். அத்துடன், அந்த திட்டங்களின் தராதரம் அறிய, அத்திட்டம் கடந்த ஒரு வருடத்தில் கொடுத்த வருமான சதவிகிதம், மற்றும் 2, 3, 5 வருட சராசரியும் கொடுத்துள்ளேன். மேலும் பகுத்தறிந்து, முதலீடு தொடர்பான முடிவெடுங்கள்.


இந்தத் திட்டங்கள் பற்றிய மேல்விபரங்களுக்கு அல்லது பரஸ்பரநிதி முதலீடு தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் இங்கு பின்னூட்டவோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

பரஸ்பரநிதி முதலீடுகள் சந்தை நிலவரத்தைப்பொருத்தது. பங்குச்சந்தை தொடர்பான மற்ற முதலீடுக‌ள் போலவே பரஸ்பரநிதியின் வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்குட்பட்டது. முந்தைய வருட செயல்பாடுகள், வருங்காலத்துக்கு உத்தரவாதமாக எடுத்துக்கொள்ள இயலாது.

1 comment:

butterfly Surya said...

நல்ல பதிவு..

வாழ்த்துக்கள்..

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com